ஜனாதிபதி அநுரவுடன் மஹிந்த சிறிவர்தன சந்திப்பு|
ஆசிய அபிவிருத்தி வங்கியின் பிரதி நிறைவேற்றுப் பணிப்பாளர் மஹிந்த சிறிவர்தன, ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவைச் சந்தித்து நாட்டின் பொருளாதார நிலவரங்கள் குறித்துக் கலந்துரையாடியுள்ளார்.
இலங்கையின் தற்போதைய பொருளாதார சவால்கள், எதிர்கால வாய்ப்புகள் மற்றும் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கான வழிகள் குறித்து இந்தச் சந்திப்பில் விரிவாக ஆராயப்பட்டது.
குறிப்பாக, இலங்கையின் பொருளாதார மீட்சிக்காகவும், நிலையான வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கும் ஆசிய அபிவிருத்தி வங்கி வழங்கக்கூடிய ஆதரவுகள் குறித்து இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.
இந்தச் சந்திப்பு குறித்து மஹிந்த சிறிவர்தன தனது எக்ஸ் தளத்தில் பொருளாதார சவால்களை எதிர்கொள்வது மற்றும் நெகிழ்ச்சித்திறனை அதிகரிப்பது தொடர்பாக ஜனாதிபதியுடன் பயனுள்ள பேச்சுவார்த்தைகளை நடத்தினேன்.
இலங்கையின் நிலையான வளர்ச்சிக்கு ஆசிய அபிவிருத்தி வங்கி தொடர்ந்தும் ஆதரவளிக்கும் எனக் குறிப்பிட்டுள்ளார். மஹிந்த சிறிவர்தன 2025 ஜூன் வரை இலங்கையின் திறைசேரிச் செயலாளராகப் பணியாற்றியிருந்தார்.
அவரது ஓய்வுக்குப் பின்னர், ஆசிய அபிவிருத்தி வங்கியின் பிரதி நிறைவேற்றுப் பணிப்பாளராக அவர் பதவியேற்றார்.
இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் lanka4.com ஊடகத்துடன் இணைந்திருங்கள்